ப்ரசித் கிருஷ்ணாவை 10 கோடி கொடுத்து தட்டி தூக்கிய அணி.! ஏலம் போகாத மேலும் இரு இந்திய வீரர்கள்.!
ipl Auction 2022 RR
இந்திய பந்துவீச்சாளர் தீபக் சாஹரை 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்து கொண்டது.
மும்பை வீரர் இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்து கொண்டது.
தமிழக வீரர் நடராஜனை 4 கோடிக்கு சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், தினேஷ் கார்த்திக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஏலம் எடுத்தது.
இந்நிலையில், ப்ரசித் கிருஷ்ணாவை 10 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார். இதேபோல், இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.