#IPL2023 : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரும் டெல்லி கேப்டனுமான ரிஷப் பந்த் கார் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அதன் காரணமாக அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அணியை வழிநடத்துவார் என டெல்லி கேப்பிடல்ஸ் அணி அறிவித்துள்ளது. 

மேலும், ரிஷப் பந்துக்கு பதிலாக பெங்கால் ரஞ்சி அணிக்காக விளையாடிய அபிஷேக் போரலை டெல்லி அணி நிர்வாகம் விக்கெட் கீப்பராக ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் 2021ம் ஆண்டு நடைபெற்ற 19 வயது உட்பட்டோருக்கான உலக கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 Delhi Capitals Abhishek Porel replaces rishabh pant


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->