சேப்பாக்கத்தில் கடைசி லீக் போட்டி.. சென்னை - கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 74 போட்டிகளில் லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் 7 போட்டிகளில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் வரும் மே 14ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோத உள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. காலை 10:30 மணி முதல் 11 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக 2,500 ரூபாய்க்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த போட்டிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரூ.1500 ரூபாய்க்கான டிக்கெட்கள் நேரடியாக மட்டும் விற்பனை செய்யப்படும். அதேபோல் 2000 மற்றும் 2500 ரூபாய்க்கான டிக்கெட்டுகள் நேரடி மற்றும் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படும்.

மேலும், 3000 மற்றும் 5000 ரூபாய்க்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும். அந்த வகையில் ஆன்லைன் டிக்கெட்களை பேடிஎம் அல்லது www.insider.in என்ற இணையதளம் மூலமாக வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 CSK vs KKR match ticket sale from today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->