கேப்டன்களாக மோதும் பாண்ட்யா சகோதரர்கள்.. குஜராத் - லக்னோ அணிகள் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, மே 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ்  அணி இதுவரை 10 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் 7 போட்டியில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அதேபோல் 10 போட்டியில் விளையாடி உள்ள லக்னோ 5 போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் முடிவில்லை என 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை 3:30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஹார்டிக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், க்ருணல் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

புள்ளி பட்டியலில் முதல் மற்றும் 3வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த இரு அணிகள் என்று மோதுவதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக எதிரெதிர் அணியின் கேப்டன்களாக சகோதரர்கள் மோதிக் கொள்கின்றனர். அதன் காரணமாக இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை நேருக்கு நேர்

இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 3 போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 51th match GT vs LSG


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->