IPL: DC பேட்டிங்கில், சீறிப்பாய்ந்த பந்துகளுடன் சிதறிய விக்கட்டுகள்..! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் போட்டித்தொடர் 2021 நடைபெற்று வருகிறது. இன்றைய (15/04/2021) போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் போட்டியிடுகிறது. இன்றைய டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

இன்றைய ஆட்டத்தில் களத்தில் இருந்த டெல்லி அணி வீரர்கள் பிரிதிவி ஷா 5 பந்துகளில் 2 ரன்கள் அடித்து வெளியேற, ஷிகர் தவான் 11 பந்துகளில் 9 ரன்கள் அடித்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஏ ரஹானே - ரிஷப் பண்ட் ஜோடி களத்தில் நின்று விளையாட தொடங்கியது. இதன் நொடிப்பொழுதில் அதிர்ச்சி தரும் வகையில் ஏ ரஹானே 8 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார். 

இதனால் அணி ரன்கள் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில், வீரர்களை தக்க வைக்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டது. 5.5 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மேலும், எம் ஸ்டோனிஸ் 5 பந்துகளில் ஒரு ரன்கள் கூட அடிக்காமல் வெளியேறினார். 

இதனையடுத்து, ரிஷப் பண்ட் - லலித் யாதவ் ஆகியோர் களத்தில் இருந்தனர். ரிஷப் பண்ட் மட்டும் நின்று ஆடியதால் அணியின் ரன்கள் குறைந்த வேகத்தில் உயர தொடங்கியது. 9.4 ஓவர்களில் முடிவில் டெல்லி அணி 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரிஷப் பண்ட் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார். 

பொறுமையாக ஆட வேண்டிய ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அவுட்டாகினர். லலித் யாதவும் 24 பந்துகளில் 20 ரன்கள் அடித்து அவுட்டாகினர். இதனையடுத்து களத்தில் டாம் கரனும் - கிரீஸ் வோகாஸும் களத்தில் இருந்தனர். டெல்லி அணி 17.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. 

டாம் கரனும் 16 பந்துகளில் 21 ரன்கள் அடித்து வெளியேறினார். இதனையடுத்து கிரீஸ் வோகாஸ் - ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி களத்தில் இறங்கியது. ரவிச்சந்திரன் அஸ்வின் 4 பந்துகளில் 7 ரன்கள் அடித்த நிலையில், முதல் பாலிலேயே சிக்ஸ்ர் அடித்து அசத்தி பின்னர் வெளியேறினார். 

இதனையடுத்து, கிரீஸ் வோகாஸ் - கே ரபாடா ஜோடி களத்தில் இருந்தது. ஆட்டத்தின் இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. நின்று ஆட வேண்டிய இடத்தில் நின்று ஆடாமலும், 50 ரன்கள் அடித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் கிடைத்த அதீத உற்சாகமும் அணியின் ரன்கள் சேர்ப்பை குறையும் வகையில் பல விக்கெட்டுகளை எடுக்க வைத்தது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 March RR Vs DC 15 April 2021 DC Worst Batting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->