ஒலிம்பிக் போட்டி : இந்திய அணிக்கான கண்ணைக்கவரும் வண்ணத்தில் ஜெர்சி வெளியீடு!  - Seithipunal
Seithipunal


ஒலிம்பிக் போட்டி தொடரானது ஜப்பான் தலைநகரான டோக்கியோயில் ஜூலை 23ம் தேதி துவங்குகிறது. உலகமெங்கும் உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் தொடருக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் 50 நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க உள்ள நிலையில், இந்திய நாட்டின் சார்பில் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அணியவுள்ள ஜெர்சியை இந்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு  நேற்று வெளியிட்டுள்ளார்.

இந்திய வீரர்களுக்கான ஜெர்சியில் இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறமான ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஜெர்சியை அணிந்து கொண்டு இந்திய அணியின் விளையாட்டு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 

இந்தியாவின் நட்சத்திர விளையாட்டு வீரர்களான பஜ்ரங் பூனியா, நீரஜ் சோப்ரா, ரவிக்குமார் தஹியா, சுமித் மாலிக், சீமா பிஸ்லா ஆகியோர் இந்த ஜெர்சி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதுவரை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 100கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் நடைபெற வேண்டிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team Olympic jersey revealed by Indian sports minister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->