டி20 போட்டிகள்.. பாகிஸ்தான் சாதனையை முறியடித்த இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் சாதனையை முறியடித்துள்ளது. 

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தானின் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. 

சர்வதேச டி20 போட்டியில் பாகிஸ்தான் தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனிடையே டி20 உலக கோப்பை 2021 நியூசிலாந்திற்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டியில் இந்திய அணி கடைசியாக தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு இந்திய அணி தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

2021 டி20 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, மட்டும் நமீபியாவை வீசியது. அதன் பிறகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணியை 3 - 0 என்ற கணக்கில் தோற்கடித்தது. அதன் பிறகு கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் தொடர்ச்சியாக 9 சர்வதேச டி20 போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் சாதனையை சமன் செய்தது. 

இந்நிலையில், இலங்கை அணியை நேற்று தோற்கடித்து, டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து 10 போட்டிகளில் வென்று பாகிஸ்தான் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team beaks pakistan record


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->