இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்.. பவுலிங் மைண்டைன் ஸ்பெசல் பாபு நட்கர்னி இயற்கையை எய்தினார்..!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியினுடைய முன்னாள் ஆல்ரவுண்டர் பாபு நட்கர்னி இயற்கையை எய்தியுள்ளார். இவருக்கு வயது 86 ஆகும் நிலையில், இவர் பேவாயில் இருக்கும் அவரது மகள் அனுராதா கரேயின் இல்லத்தில் இருந்த நேரத்தில் இயற்கையை எய்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் தற்போது வயது மூப்பின் காரணமாக இவர் இயற்கையை எய்தியுள்ள நிலையில், இவர் கடந்த 1950 ஆம் வருடத்தில் இருந்து 1960 ஆம் வருடம் வரை 41 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் பிறந்த பாபு நட்கர்னி இடதுகை சுழற்பந்து வீச்சில் மிகவும் பிரபலமான நபரவர். இவர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் ஓவருக்கு சராசரியாக 1.67 ரன்களை மட்டுமே கொடுக்கும் நபராகவும் விளங்கி வந்துள்ளார். 

கடந்த 1964 ஆம் வருடத்தில், சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில், 21 மைண்டைன் ஓவர்களை தொடர்ந்து வீசி, யாரும் செய்யாத சாதனையினை செய்த நபராகவும், 32 ஓவர்களில் 27 மைண்டைன் 5 ரன்கள் விக்கெட் இல்லாமல் உலகளவில் சாதனை படைத்த சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு நபராகவும் திகழ்ந்து வந்தார். 

இவர் கடந்த 1960 ஆம் வருடம் - 1961 ஆம் வருடத்தில் பாக்கிஸ்தான் நாட்டிற்கு எதிரான தொடரில் ஒரேயொரு இன்னிங்சில் 32 ஓவர் 24 மைண்டைன் 23 ரன்கள் என்று அசத்தியிருந்தார். இந்த போட்டிகளுக்கு பின்னர் டெல்லியில் நடைபெற்ற பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் 34 ஓவர் 24 மைண்டைன் 24 ரன்கள் ஒரு விக்கெட் என்று சிறப்பாக ஆடியிருந்தார். 

1964ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 21 மெய்டன் ஓவர்களை தொடர்ச்சியாக வீசி இதுவரை யாரும் செய்யாத சாதனைக்குச் சொந்தக் காரர் பாபு நட்கர்னி. 32 ஓவர்கள் 27 மெய்டன் 5 ரன்கள், விக்கெட் இல்லை இது உலக அளவில் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாக இன்று வரை திகழ்கிறது.

இவர் வலைப்பயிற்சி சமயத்தில் காசினை வைத்து ஓய்வு இல்லாது தொடர்ந்து வீசிக்கொண்டு இருந்ததாகவும், பேட்டிங்கை பொறுத்த வரையில் 1,414 ற்றங்கள் எடுத்து உள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சதம் மற்றும் 7 அரைசதம் எடுத்து அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 88 விக்கெட் எடுத்த  பாபு நட்கர்னி 191 முதல் தர போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian cricket bowling champion bapu nadkarni died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->