1000-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி..டாஸ் வென்று பௌலிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

அதாவது, மூன்று ஒருநாள் போட்டிகளும் ( பிப்-6,9,11 தேதிகளில்) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், மூன்று டி20 போட்டிகள் (பிப்-16,18,20 தேதிகளில்) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெறுகின்றன.  

இந்த நிலையில் இந்திய அணி இன்று 1000 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதுவரை 999 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 518 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், 431 ஒருநாள் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.மேலும்,9 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் ஆல்ரவுண்டர் தீபக் கூட இந்திய அணிக்காக அறிமுகமாக உள்ளார்.

அணி விபரம்

இந்திய அணி வீரர்கள் : ரோகித் சர்மா(கே), இஷான் கிஷான், விராட் கோலி, ரிஷப் பண்ட்(வி.கீ), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சஹால், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் :

பிராண்டன் கிங், ஷாய் ஹோப், ஷமர் ப்ரூக்ஸ், டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன்(வி.கீ), கீரன் பொல்லார்ட்(கே), ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச், அகேல் ஹொசைன்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won the toss choose to field


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->