முதல் இருபது ஓவர் போட்டிக்கான இந்திய அணி! முக்கிய வீரருக்கு விதிக்கப்பட்ட தடை!  - Seithipunal
Seithipunal


வங்கதேசம் அணியுடனான தொடர் முடிந்த பிறகு இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதும் மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்  இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது. 

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே ஆப்கானிஸ்தானுடன் ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்த நிலையில், தற்போது இந்தியாவுடன் இருபது ஓவர் தொடரில் விளையாடவுள்ளது. இன்று ஹைதராபாத்தில் இரவு 7 மணிக்கு முதல்20 ஓவர் போட்டியானது தொடங்க உள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணியை பொறுத்தவரை மீண்டும் வலிமையான அணியாக உருவாக்கும் பொருட்டு, முன்னணி வீரர்கள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தொடர்கள் ஓய்வெடுத்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி மீண்டும் அணியின் கேப்டனாக களமிறங்கியுள்ளார்.  தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் அடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக மாற்று வீரராக சஞ்சு சாம்சன் அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே ரிசர்வ் தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் இருக்கும் நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் ராகுலும் களமிறங்குவார்கள். 

மூன்றாவது இடத்தில் விராட்கோலி, 4 வது இடத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், 5வது இடத்தில் மணிஷ் பாண்டே 6 ஆவது இடத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதற்கு அடுத்து 5 நிலைகளில் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர் தேர்வு மிகவும் சிக்கலாக இருக்கிறது. ஏனெனில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதே போல மிகச் சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர் நீடிக்கிறார்.  அதேபோல கடந்த வங்கதேச தொடர் இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய சிவம் துபே அணியில் நீடிக்கிறார். இதனால் இவர்கள் 3 பேரும் வேகப்பந்து வீச்சாளர் பிரிவில், இடம்பிடித்து விடுவார்கள். 

குல்தீப் யாதவ் வாஷிங்டன் சுந்தர் ரவீந்திர ஜடேஜா யுவென்ற சாஹல் ஆகிய நால்வரும் இருக்கிறார்கள். இதில் ரவீந்திர ஜடேஜா வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவர் அணியில் இடம்பிடிப்பார்கள். புவனேஷ்குமார் வந்துவிட்ட நிலையில், பவர்பிளே ஓவர்களுக்கு வாஷிங்டன் சுந்தர் தேவைப்படமாட்டார். சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில், குல்தீப் யாதவ் யுவென்ற சாஹல் இருவரில் ஒருவர் அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேற்கு இந்திய தீவுகளை பொறுத்தவரையில், அந்த அணியின் முன்னணி வீரர் ஷை ஹாப் இந்த தொடரில் விளையாட வில்லை.  அதைப்போல பந்தை சேதப்படுத்தியதாக தடை பெற்றுள்ள நிக்கோலஸ் பூரான் இந்த போட்டியுடன் அவருக்கு தடை முடிவடைகிறது. அதனால் இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்பு இல்லை. அதனால் விக்கெட் கீப்பராக மீண்டும் ராம்தின் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. 

20 ஓவர் போட்டிகள் பொருத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் பலம் வாய்ந்த அணி என்பதால் இந்த தொடரானது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தேச அணி : ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷாப் பந்த், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் / ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் / யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார்

லென்ட்ல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், பிராண்டன் கிங், ஷிம்ரான் ஹெட்மியர், கீரோன் பொல்லார்ட், டெனேஷ் ராம்டின், ஜேசன் ஹோல்டர், கீமோ பால், ஃபேபியன் ஆலன், ஹேடன் வால்ஷ் ஜூனியர், ஷெல்டன் கோட்ரெல்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india west indies first T20 match probable team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->