இந்திய அணியில் தவானுக்கு பதில் யார் தெரியுமா? அச்சுறுத்தும் மழை! டாஸ் வென்ற பாகிஸ்தான்! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை போட்டியில், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இருக்கும் பரபரப்பை விட அதிக பரபரப்பை கொண்டதாக கருதப்படுவது இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியாகும். இரண்டு நாடுகள் இடையே சரியான நல்லுறவு இல்லாத காரணத்தினால், இரு தரப்பு தொடர்களில் விளையாடாத இந்த இரண்டு அணிகளும் ஐசிசி போட்டிகளில் மட்டும் மோதி வருகிறது. 

இந்த நிலையில் இன்று நடைபெறும் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. உலக கோப்பை ஆட்டங்களை பொருத்தவரையில் இதற்கு முன் ஆறு முறை நேருக்கு நேர் இந்தியா பாகிஸ்தான் சந்தித்துள்ள நிலையில், அந்த ஆறு போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. அந்த வரலாற்றை தக்க வேண்டிய வைக்க வேண்டிய நெருக்கடியில் இந்திய அணியும், வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய நெருக்கடியில் பாகிஸ்தான் அணியும் களம் இறங்குகிறது. 

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக கடந்த போட்டியில் ஆடிய ஷிகர் தவான் காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் நிலையில், அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் களமிறக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் 4வது இடத்தில் களம் இறங்கிப் பேட் செய்வார் என்றும், லோகேஷ் ராகுல் ரோஹித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது. 

விஜய் சங்கர் ஆட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வாய்ப்பு இந்திய அணிக்கு இருப்பதால் இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. பாகிஸ்தான் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சும் சுழற்பந்து வீச்சும் பலமாக இருப்பதால், இரண்டு அணிகள் இடையேயான ஆட்டமானது அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு அணிகளும் விளையாடும் போட்டியை மழை வந்து தடுத்து விடுமோ என்ற அச்சம் தான் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. 

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. 

இந்திய அணி : ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி(c), விஜய் ஷங்கர், MS டோனி(w), கேதார் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவென்ற சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா. 

பாகிஸ்தான் அணி : இமாம்-உல்-ஹக், பாகர் ஜமான், பாபர் அசாம், முஹம்மத் ஹபீஸ், சரபாரஸ் அஹ்மத்(w/c), சோயிப் மாலிக், இமாட் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முஹம்மத் அமீர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india pakistan battle in cwc19


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->