இளையோர் ஆசிய கோப்பை.! பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.!! - Seithipunal
Seithipunal


இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வந்த 23 வயதுக்கு உட்பட்டோருக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இந்திய அணிக்கு 353 ரன்கள் என்ற இமாலய இலக்கை பாகிஸ்தான் நிர்ணயித்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன் 29 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். தொடக்க வீரராக களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா மட்டும் 61 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் சொற்பரங்களுக்கு அவுட் ஆகி வெளியேறியதால் இந்திய அணி 40 ஓவரில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 128 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India lost to Pakistan in ACC Mens Emerging Teams AsiaCup


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->