தங்கத்தை கைப்பற்றிய தங்கங்கள்! இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம், பட்டியலில் முன்னேற்றம்!  - Seithipunal
Seithipunal



சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தங்க பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறது. இது இந்தியாவிற்கு கிடைத்த இரண்டாவது தங்கமாகும்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணி முதல் முயற்சியிலேயே தங்க பதக்கத்தை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. 

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா ஸ்ரீலங்கா அணிகள் மோதியது. முதலில் ஆடிய இந்திய அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா  46 ரன்களும்  ஜெமிமா ரோட்டிக்ஸ் 42 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். 

117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியை இந்திய வீராங்கனை டைட்டஸ் சாது நிலைகுலைய செய்தார். அவர் முதல் ஓவரரை மெய்டனாக வீசி இரண்டு விக்கெட்டையும் இரண்டாவது ஓவரில் ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கிடையும், மூன்றாவது ஓவரில் இரண்டு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தும் சிறப்பாக வீசினார். நான்கு ஓவரில் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். 

இறுதிவரை இலங்கை அணி போராடிய நிலையில் இறுதி நேரத்தில் இந்திய வீராங்கனைகள் பந்துவீச்சு சிறப்பாக அமைய, இலங்கை அணி 97 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இந்த வெற்றியின் மூலம் இந்தியா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறது. இரண்டு தங்கம் மூன்று வெள்ளி ஆறு வெண்கலத்துடன் 11 பதக்கங்களுடன் இந்தியா ஐந்தாவது இடத்தை ஹாங்காங்குடன் பகிர்ந்து கொண்டிருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India beat srilanka in cricket and Bags second gold medal in asian games


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->