சென்னை சேப்பாக்கத்தில் சிக்ஸர் மழை பொழிந்த இந்திய ஏ அணி! விழிபிதுங்கிய நியூசிலாந்து அணி!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள நியூசிலாந்து ஏ அணி இந்திய ஏ அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடரானது சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இவ்விரு அணிகள் இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள்  கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய ஏ அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் வெற்றிவாகை சூடி இருந்தது. இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 

இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. அந்தணியில் மிகச் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திர 61 ரன்கள், ஜோ கார்ட்டர் 72 ரன்கள் எடுக்க,  47ஓவர்களில் 219 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய ஏ அணி தரப்பில் மிக சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுடன் 4 விக்கெட்டுகளையும், ரிஷிதவான், ராகுல் சஹர் தலா 2 விக்கட்டுகளையும், ராஜ் பவா, உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்கள். 

பின்னர் 220 ரன்கள்  அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடுவதிலேயே குறியாக இருந்தது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் ப்ரீத்வி ஷா பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்குமாக பந்துகளை பறக்கவிட்டுக்கொண்டிருந்தார்.

மறுமுனையில் ஆடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்காட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் 34 பந்துகளில் நான்கு பவுண்டரி ஒரு பிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஜாட் பட்டிதர் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் உடன் 20 எடுத்து ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் 35 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த ப்ரீத்வி ஷா 48 பந்துகளில் 11 பௌண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் விளாசி 77 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர்களான திலக் வர்மா, ராஜ் பவா இருவரும் அடுத்தடுத்த டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் நெருக்கடிக்குள்ளான அணியை மீட்கும் வகையில் ஆல் ரவுண்டர்களான ரிஷி தவானும், சர்துல் தாக்கரும் ஆட்டத்தின் வேகத்தினை மாற்றினர். 

அந்த வகையில் நிதானமாக ஆடிய தவான் 43 பந்துகளில் 22 ரன்கள்டனும் ஷார்துல் தாக்கூர் 24 பந்துகளில் மூன்று பவுண்டரி ஒரு சிக்சர் உடன் 25 ரன்களையும் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணி ரன்ரேட்டை ஓவருக்கு ஆறுக்கு  மேலாகவே வைத்திருந்தது. இறுதியில் 34 ஓவர்களிலேயே 222 ரன்கள் எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்று கணக்கில் ஒரு போட்டியை மிச்சம் வைத்தே தொடரை கைப்பற்றி இருக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india a beat new zealand a by 4 wickets at chennai and clinch the series 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->