11ல் 5.! இந்திய அணி பேட்டிங்.! சாம்சன் ஆட்டம் தெறிக்குமா?! முழு விவரம்.!  - Seithipunal
Seithipunal


இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய முன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் ஐந்து புதிய இளம் வீரர்களை களமிறங்கியுள்ள இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இளம் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. 

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று 3 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தொடரை வென்று விட்டதால், அதிக முக்கியத்துவம் இல்லாத கடைசி போட்டியில் ஒருசில புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக இந்த போட்டிக்கான இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒன்று இரண்டு அல்ல, ஐந்து புதிய வீரர்களை இந்திய அணி களமிறக்கியுள்ளது. அதிரடி மன்னன் சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ராகுல் சஹர், சேத்தன் சக்கரியா, கே கெளதம் ஆகியோர் இன்றைய போட்டியில் புதிதாக களமிறக்கப்பட்டுள்ளனர். 

சர்வேதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகும் சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா உள்ளிட்ட ஐந்து பேருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 11 வீரர்களில் ஐந்து புதிய வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்திய அணி வீரர்கள் பட்டியல்: 
P ஷாவ், S தவான், S சாம்சன், M பாண்டே, S யாதவ், N ராணா, H பாண்டிய, K கெளதம், R சஹர், N சைனி, C சக்கரியா. 

இலங்கை அணி பட்டியல்:
WIA பெர்னாண்டோ, M பானுக, B ராஜபக்ச, D de சில்வா, C அசலாங்க, D ஷனாக, WRT மெண்டிஸ், C கருணாரட்ணவே, A தனஞ்சய, D சமீரா, P ஜெயவிசக்ரம.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs sl 2021 3rd odi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->