4-வது டி20 போட்டி.. அதிரடி மாற்றம்.? இந்திய அணியின் உத்தேச பட்டியல் வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, இரு அணிகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். முதல் இரண்டு ஆட்டங்களில் தொல்லை அடைந்த இந்திய அணி, 3-வது ஆட்டத்தில் எழுச்சி பெற்றது. 

தொடக்க ஆட்டக்காரர்கள் ஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட்டின் அரைசதமும், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹலின் அபார பந்து வீச்சும் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தது. மேலும், ராஜ்கோட் மைதானத்தில் இந்திய இதுவரை மூன்று முறை டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் இந்திய அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. மூன்று முறை 192-க்கும் மேல் அடிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இன்றைய போட்டியில் அதிக ரன்கள் எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியின் உத்தேச பட்டியல் : 

ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் அல்லது அர்ஷ்தீப்சிங்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs sa 4th match india plays


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->