#ஆசிய கோப்பை : அப்படி போடு, மாஸ் ரீ-என்ட்ரி கொடுத்த தமிழன்.!  - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை 2022 : டி20 கிரிக்கெட் தொடரின் இன்று இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. 

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி தற்போதுவரை, 6.2 ஓவர்களில், 2 விக்கெட் இழப்பிற்கு, 45 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் மாபெரும் மாற்றமாக, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.,க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்கி, பஹர் ஜமான் கேட்சையும் பிடித்து அசத்தியுள்ளார். 

கிரிக்கெட்டில் தனது ரீ-எண்ட்ரியை சிறப்பாக கொடுத்துள்ள தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்தி, கடந்த சில தொடர்களில் ஃபினிஷர் ரோலை சிறப்பாக கொடுத்துள்ளார். இதனால், இந்திய அணி அவரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

இந்தியா அணி விவரம் : ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ்கான். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs pak dk entry


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->