நியூசிலாந்து பந்துவீச்சை புரட்டி எடுத்த சுப்மன் கில் அதிரடி சதம்.. இமாலய இலக்கு.. டி20 தொடர் யாருக்கு.? - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 235 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், 2வது டி20 போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளதால் 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

அதன்படி, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய சஹாலுக்கு பதிலாக உம்ரான் மாலிக் விளையாடுகிறார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் டி20 போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 குவித்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி 44 ரன்களும், கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த 63 பந்துகளில் (12 பவுண்டரி & 6 சிக்ஸர்) 126 ரன்கள் குவித்தார்.

அதனைத் தொடர்ந்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டி20 தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs NZ 3rd T20 india target of 235 runs against newzealand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->