இந்தியா - நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி.. இந்தியா பௌலிங் தேர்வு.. தொடரை கைப்பற்றுமா? - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் முதலில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ராய்ப்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பௌலிங் தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற தொடரை கைப்பற்ற போராடும் என்பதாலும், தொடரை சமன் செய்ய நியூசிலாந்து அணியும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விவரம்

நியூசிலாந்து அணி 11 வீரர்கள் :

ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம்(w/c), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்

இந்திய அணி 11 வீரர்கள் :

ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs NZ 2nd ODI india won the toss choose Bowl


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->