முக்கிய தொடரிலிருந்து இரு வீரர்களுக்கு திடீர் ஓய்வு! காரணம் என்ன? பிசிசிஐ வட்டார தகவல்! - Seithipunal
Seithipunal



அயர்லாந்துக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியில் இளம் வீரர்கள் இருவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணிக்கு எதிராக டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது.

முதல் டி20 ஆட்டம் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி நடக்க உள்ள நிலையில், அயர்லாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஹார்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தொடர் பணிச்சுமை காரணமாக ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வை அளிக்க உள்ளதாக வெளியான அந்த தகவல் நமக்கு தெரிவிக்கின்றது.

மேலும், ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிக்கு ஹர்த்திக் பாண்ட்யா முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால், பிசிசிஐ இந்த முடிவை எடுத்து உள்ளதாகவும் தெரிகிறது.

அதே சமயத்தில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு பிறகு, ஹர்த்திக் பாண்ட்யா தான் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் மட்டுமே இந்த ஓய்வு முடிவு உறுதியாகும் என்கிறது பிசிசிஐ வட்டாரம்.

உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியும் துணை கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார் என்பதால் அவருக்கு நிச்சம் ஓய்வு கொடுக்கலாம்.

இதேபோல் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விளையாடி வரும் சுப்மன் கில்-லுக்கும் ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs ireland 2023 hardik pandya shubman gill


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->