இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி.. இந்திய அணியில் இடம்பெறவுள்ள வீரர்களின் பட்டியல்.? - Seithipunal
Seithipunal


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆகையால், இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற்று அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

இதனிடையே இந்த தொடருக்கு முன்பு பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சில வீரர்கள் அணியில் இருந்து வெளியேறிய நிலையில், மயங்க் அகர்வால் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள உள்ள வீரர்கள் யார் யார்.? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போது நாளை விளையாடவுள்ள இந்திய அணியின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரி, அஸ்வின், சிராஜ், முகமது ஷமி, பும்ரா ஆகிய 11 பேர் நாளை இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs eng 1 test match indian team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->