சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி.. நாளை காலை நேரடி டிக்கெட் விற்பனை தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டிக்கான நேரடி டிக்கெட் விற்பனை நாளை காலை தொடக்கம். 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. 

இதில், இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டிகள் இந்திய அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து 3வது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கிய நிலையில், ரூ.1500, ரூ.3000  டிக்கெட்டுகள் சில மணி நிமிடங்களில் வெற்றி தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், ரூ.5000, ரூ.6000, ரூ.8000, ரூ.10,000 டிக்கெட்டுகளும் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  நேரடி டிக்கெட் விற்பனை நாளை காலை 11மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள நேரடி கவுண்டரில் டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும், C, D & E கேலரிக்கு மட்டும் ரூ.1500 டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல் ஒரு நபருக்கு 2 நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IND vs AUS 3rd ODi match in Chennai Direct ticket sale on March 18


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->