தொடரைக் கைப்பற்றுமா இந்திய அணி.? இன்று இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அணியில் மாற்றம்

இந்திய கடந்த போட்டியில் விளையாட கேப்டன் ரோஹித் சர்மா இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக கடந்த போட்டியில் விளையாடிய இஷான் கிஷான் வெளியேற்றப்படுவார்.

அதேபோல் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய முகமது ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயதேவ் உனத்கட் அல்லது உம்ரன் மாலிக் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் 4வது டெஸ்ட் போட்டியில் முஹம்மது ஷமி ஓய்வில்லாமல் சிறப்பாக பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஆஸ்திரேலியா அணியில் கடந்த போட்டியில் விளையாடாத டேவிட் வார்னர் மற்றும் அலெக்ஸ் கேரி என்று களமிறங்குகின்றனர்.

தொடரை கைப்பற்றுமா இந்திய அணி

சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது மிகவும் கடினம். அந்த வகையில் இந்திய அணி இந்த ஆண்டு இந்தியாவில் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்த மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 9 ஒரு நாள் போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியும், ஒரு போட்டி சமனிலும் முடிந்துள்ளது.

இரு அணிகளும் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என சம பலத்துடன் மோதும் இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மழை குறுக்கீடு

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் ஆந்திர பிரதேசம் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் விசாகப்பட்டினத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக இந்த போட்டி மழையால் தடைபட அதிக வாய்ப்புள்ளது.

எதிர்பார்க்கப்படும் அணி

இந்திய அணி

ஷுப்மான் கில், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்/ஜெய்தேவ் உனத்கட்.

ஆஸ்திரேலியா அணி

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் (கே), அலெக்ஸ் கேரி (வி.கீ.), கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 2nd ODI match today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->