இன்றைய போட்டியில்.! வங்கதேசத்தை வீழ்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றைய ஆட்டம் இலங்கை  மற்றும் வங்கதேசம் அணிகள் இடையே 16 வது ஆட்டம் நடைபெற  உள்ளது. இந்த போட்டி கவுண்டி பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறும். இதுகுறித்து  இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூரியா தனது அணிக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

உலகக் கோப்பை போட்டியில்  இன்று நடக்கும் 16 வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாட உள்ளன. இதுகுறித்து  இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூரியா தனது அணிக்கு ஆலோசனை கூறியுள்ளார். ஒரு நாள் போட்டி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் வங்கதேச அணி, 9வது இடத்தில் இருக்கும் இலங்கை அணியுடன் விளையாட உள்ளது. 

இன்று நடைபெற இருக்கும்  போட்டி பிரிஸ்டல் மைதானத்தில் நடக்க உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, அதன் பிறகு ஆப்கானிஸ்தான் அணியுடன்  வெற்றிப்பெற்றது. பாகிஸ்தான் அணியுடனான மூன்றாவது போட்டி மழையால் ஆட்டம்  ரத்து செய்யப்பட்டது இரு அணிக்கும்  தலா ஒரு புள்ளி தரப்பட்டது.

 வங்கதேச அணி இதுவரை விளையாடியுள்ள  மூன்று லீக் போட்டியில், தென் ஆப்பரிக்கா விடம் முதல் போட்டியில் வெற்றிப்பெற்றது. இதை தொடர்ந்து , நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணியிடம்  தோல்வி அடைந்துள்ளது. இலங்கை அணி தனது 4 வது  போட்டியில் வங்கதேச அணியுடன் இன்று  மோதவுள்ளது. மேலும் உலக்கோப்பை போட்டியில் இலங்கை அணியை வங்கதேசம் ஆணி வெற்றி  வெற்றிபெற்றதே இல்லை.

இது குறித்து  இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர்  சனத் ஜெயசூரியா அவர் ஆலோசனை கூறியதாவது. இலங்கையணி வீரர்கள் தனது அடிப்படைகளை சரியாக எடுத்துக்கொண்டு, வங்கதேச அணி மீது அழுத்தம் கொடுக்கவாவும், மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும். வெற்றிபெறுவதற்காக விளையாடுங்கள் இலங்கை அணி வீரர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In today's competition. Former cricketer to advise Sri Lanka for win


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->