இது மட்டும் நடந்தால், இந்தியாவிற்கு தான் உலகக்கோப்பை! ஆருடம் பலிக்குமா?  - Seithipunal
Seithipunal


இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரானது, தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது. 

இந்தூரில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால்,தொடர் முடிந்த பின்னரும் முதலிடத்தை தக்கவைக்கும், முதல் தரவரிசை அணியாகவே உலகக்கோப்பைக்கு செல்லும். இதன் காரணமாகவே இந்தூரில் நடைபெறும் இரண்டாவது போட்டியானது முக்கியதத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் உலகின் நம்பர் ஒன் அணியாக செல்வதில், முந்தைய வரலாறு இந்திய அணிக்கு சாதகமான ஒரு உளவியல் நம்பிக்கையையும் கொடுக்கும். கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலக கோப்பைக்கு செல்வதற்கு முன்பாக நம்பர் ஒன் இடத்தோடு தான் உலக கோப்பைக்கு சென்று இருக்கிறது. 

இந்த புள்ளிவிபரம் தற்பொழுது இந்திய அணிக்கு புதிய நம்பிக்கையை தரும் விதமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா போட்டித் தொடரை வென்று, இந்திய அணி நம்பர் ஒன் அணியாக உலகக்கோப்பைக்கு செல்லுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆக நம்பர் ஒன் அணியாக சென்றால் இந்திய அணி உலக கோப்பையை வென்று விடுமா என்றால்? நன்றாக விளையாடினால் மட்டுமே வெல்ல முடியும் என்பது தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. இருந்தாலும் இந்தியா கோப்பையை வெல்ல ஒரு வாழ்த்தினை சொல்லிவைப்போம்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

if India win the Aus series, go to no1 team to worldcup2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->