டபுள் தமாக்கா: வங்கப் புலியின் சுழலில் சுருண்ட ஆப்கான்! அடித்து ஆடும் சவுத் ஆப்ரிக்கா! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும் வங்கதேசமும் ஆடி வருகின்றன.

டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்யவே, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்கார்கள் (குர்பாஸ் 47, சட்ரான் 22) இருவரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.

வங்கதேச அணியின் சுழலில் கொஞ்சம் தாக்குப்பிடித்த ஒமர்சாய் 22 ரன்களை சேர்த்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 37.2 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் தற்போதுவரை 20 ஓவர் முடிவில் 91/2 ரன்கள் எடுத்துள்ளது. 


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான டெம்பா பவுமா மதுஷனகா பந்து வீச்சீல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 

தற்போது தென்னாப்பிரிக்க அணி 16.1 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்துள்ளது. அசத்தலாக ஆடிவரும் டி காக் 39 ரன்களுடனும், வான்டர் டுஸென் 48 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World Cup 2023 SA vs SL and BAN vs AFG


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->