கிரிக்கெட் விளையாட வரும் 3 புதிய நாடுகள்! அங்கீகாரம் அளித்த ஐசிசி!  - Seithipunal
Seithipunal


மூன்று நாடுகளுக்கு ஐசிசியின் உறுப்பினர் அந்தஸ்தை வழங்கி, ஐசிசி இன்று அறிவிப்பை வெளியிட்டு அவர்களை வரவேற்று உள்ளது. 

இந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் போட்டியானது, உலகளவில் விளையாடுவது எத்தனை அணி என்று பார்த்தால், பெயர் சொல்லக்கூடிய அளவிற்கு 10 என்ற அளவிலேயே இருக்கிறது. அதனையும் தாண்டி தெரிந்த அணிகள் என்றால் குறைந்தபட்சம் 20 அணிகள் தான் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியவரும். 

ஆனால் அதனையும் தாண்டி கிரிக்கெட் போட்டிகளை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி புதிய நாடுகளுக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்கி வருகிறது. 

அதன்படி தற்போது கிரிக்கெட் போட்டிகளை அனைத்து நாடுகளுக்கும் வளர்க்கும் விதமாக மூன்று நாடுகளுக்கு உறுப்பு நாடுகள் அந்தஸ்தினை  ஐசிசி வழங்கி உள்ளது. மங்கோலியா, ஸ்விட்சர்லாந்து, தஜிகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கும் உறுப்பினர்களுக்கான அந்தஸ்தை வழங்கி அவர்களை கிரிக்கெட்உலகிற்கு வரவேற்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC Welcomes 3 new associate nations to cricket world


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->