ஐசிசி புள்ளி பட்டியல் | காம்பிர், விராட் கோலிக்கு பிறகு அந்த கீரீடத்தை கைப்பற்றிய மூன்றாவது இந்தியர்!  - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் தற்போதைய நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ். குறிப்பாக நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் அரைசதம் கண்ட சூர்யகுமார் யாதவ், ஐசிசி பேட்டிங் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆனார். 

பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அக்டோபர் 2 அன்று, கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்குப் பிறகு டி20 சர்வதேச கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆன இந்தியாவின் மூன்றாவது வீரர் சூர்யா ஆனார்.

இந்த கீரீடத்தை பெரும் முன்றாவது இந்திய வீரர் சூரியகுமார் யாதவ். முன்பாக காம்பிர், விராட் கோலி டி20 சர்வதேச கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் பட்டத்தை பெற்றிருந்தனர்.

கடந்த 4 ஆம் தேதிவரை வரை கிரீடத்தை வைத்திருந்த சூர்யகுமார் யாதவ், தென்னாப்பிரிக்கா இடையே டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

இதன் காரணமாக சூரியகுமார் யாதவ் 16 புள்ளிகளை இழந்து தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். சூர்யகுமார் யாதவைத் தவிர முதல் 10 இடங்களில் உள்ள வேறு எந்த இந்தியரும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் தரவரிசையில் எந்த வீரரும் இல்லை.

இரண்டாவது இடத்திலிருந்த பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 854 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். பாபர் அசாம் மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரம் நான்காவது இடத்திலும் உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC T20 batsman ranking Gambhir Kohli Suryakumar Yadav


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->