ஐசிசி ரேங்க்! முதலிடம் பிடித்த முகமது சிராஜ்! அதிர்ச்சி கொடுத்த ஆல் ரவுண்டர்! - Seithipunal
Seithipunal


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசைபட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. 

இந்தப் பட்டியலில் இந்திய வீரர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். மடப்பு உலகக் கோப்பை தொடரில் 10 விக்கெட்கள் வீழ்த்தியன் மூலம், பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடியை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் சிராஜ். 

தென் ஆப்ரிக்க வீரர் கேசவ் மகராஜ் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா வீரர் ஆடம் சாம்பா மூன்றாம் இடத்திலும், இந்திய வீரர் குலதீப் யாதவ் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

ஐந்தாம் இடத்தில் பாகிஸ்தானின் ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஆஸி, வீரர் ஹாசில்வூட் உள்ளனர். ஏழாம் இடத்தில் ஆப்கான் வீரர் ரஷீத் கான், எட்டாம் இடத்தில் இந்திய வீரர் பும்ரா, ஒன்பதாம் இடத்தில் நியூசிலாந்து வீரர் ட்ரண்ட் போல்ட், 10 ஆம் இடத்தில் இந்திய வீரர் மொகமது ஷமி உள்ளனர்.

ஆல் ரவுண்டருக்கான தரவரிசை பட்டியலில் பங்களாதேஷ் வீரர் சாகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ஆப்கான் வீரர் முகமது நபி, மூன்றாம் இடத்தில் ஜிம்பாவே வீரர் சிக்கந்தர் ராசா, நான்காம் இடத்தில் ரஷீத் கான், 10 ஆம் இடத்தில் இந்திய வீரர் ஜடேஜா உள்ளார்.

பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. 

இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் 830 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இதுவரை முதலிடத்தில் இருந்துவந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா வீரர் குவின்டன் டி காக் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC ODI Ranking 2023 bowler and all rounder


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->