டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு! கொண்டாட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான அட்டவணைகள் இன்று வெளியிட்டனர்.

டி20 ஆண்கள் உலகக் கோப்பையில் ஐசிசி தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. ஆனால், 9-வது மற்றும் 10-வது இடங்களில் உள்ள இலங்கை மற்றும் வங்கதேச அணிகள், 6 இதர அணிகளுடன் தகுதிச்சுற்றில் போட்டியிட வேண்டும். அதிலிருந்து நான்கு அணிகள் தேர்வாகவுள்ளது. 2020-ம் ஆண்டு அக்டோபர் 18 முதல் 23 வரை தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளது.

குரூப் A :

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து மற்றும் தகுதி பெறும் இரு அணிகள் என 6 அணிகள் இடம்பெறுகிறது.

குரூப் B : 

இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி பெறும் இரு அணிகள் என 6 அணிகள் இடம்பெறுகிறது.

2020-ம் ஆண்டு அக்டோபர் 24 முதல் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்று தொடங்க உள்ளது. முதல் நாளன்று நடைபெறவுள்ள ஆட்டங்களில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தானும், இந்தியா - தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளது. 

ஆண்கள் டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டங்கள் நவம்பர் 11, 12 தேதிகளில் நடைபெறவுள்ளது. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நவம்பர் 15 அன்று நடைபெறுகிறது.
ஆடவர் டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஆட்டங்கள்

இந்திய அணி மோதப்போகும் அணிகள் மற்றும் தேதி :

அக்டோபர் 24: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
அக்டோபர் 29: இந்தியா vs தகுதி பெறும் அணி (ஏ2)
நவம்பர் 1: இந்தியா vs இங்கிலாந்து
நவம்பர் 5: இந்தியா vs தகுதி பெறும் அணி (பி1)
நவம்பர் 8: இந்தியா vs ஆப்கானிஸ்தான்.

 

இந்த செய்தி தெரியுமா உங்களுக்கு ''நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மது கடைகளையும் மூட அதிரடி உத்தரவு.! சற்றுமுன் உயர்நீதிமன்ற கிளை அதிரடி.!!''     


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc mens t20 world cup 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->