உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பையின் 17-வது லீக் போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர் கொண்டதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அதன் பிறகு அவர் மீண்டும் போட்டியில் பங்கு பெறவில்லை.

மேலும் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறங்கினர்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தற்போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் அடுத்து நடைபெற உள்ள இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ள வீரர்களே தொடர்ந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hardik Pandya withdraws from 2 World Cup matches


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->