தோனி மட்டும் தனியாக விளையாடி உலகக்கோப்பைகளை வெல்லவில்லை - ஹர்பஜன் சிங்.! - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நேற்று ஆசிரியருடன் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 2013ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பைகளை வெள்ளவே இல்லை என்ற சோக வரலாறு தொடர்ந்து கொண்டே வருகிறது.

இதனையடுத்து இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தோனியை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தோனி தான் ஒற்றை ஆளாக 3 உலக கோப்பைகளை வென்று கொடுத்தார் என்று பதிவிட்ட ரசிகருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த வகையில் அந்த ரசிகர் 2007 உலக கோப்பை வெற்றியை குறிப்பிட்டு "அப்போது அந்த அணிக்கு பயிற்சியாளர் கூட இல்லை. அனுபவ வீரர்கள் விளையாடுவதற்கு முன் வரவில்லை. அப்படி ஒரு சூழலில் முழுக்க முழுக்க இளம் வீரர்களை மட்டுமே வைத்து ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் தோற்கடித்து தோனி உலகக் கோப்பையை வென்று கொடுத்தார்" என பதிவிட்டிருந்தார்.

இந்த ட்விட்டிற்கு பதில் அளித்த ஹர்பஜன்சிங் "ஆம் அந்த இளம் வீரர் தன்னந்தனியாக ஆடி தான் உலகக் கோப்பையை வென்றார். அணியில் இருந்தால் மற்ற 10 வீரர்களும் விளையாடவில்லை. எவ்வளவு பெரிய மாறுபட்ட கருத்து இது?. ஆஸ்திரேலியாவோ அல்லது வேறு சில நாடுகளும் உலகக் கோப்பையில் வெல்லும் போது ஆஸ்திரேலியா எனும் தேசம் உலக கோப்பை வென்றதாக செய்தி வெளியிடுகின்றனர். ஆனால் இந்தியா உலகக் கோப்பையில் வென்றால் கேப்டன் தான் வென்றார் என கூறுகின்றனர். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு இங்கே குழுவாகத்தான் வெற்றி, தோல்விகளை எட்ட முடியும்" என பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harbhajan Singh reply to Dhoni fan for World cup


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->