ஐபிஎல் மினி ஏலம்.. கேன் வில்லியம்சனை தட்டித்தூக்கிய சாம்பியன் அணி.! - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த மினி ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். ஆனால் இதில் 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார். அதில் 30 இடங்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களுடையது. மீதி 57 இடங்களுக்கு மட்டுமே இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை ரூ.2 கோடிக்கு நடப்பு சாம்பியனான குஜராத் டைடன்ஸ் அணி வாங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Titans bought Kane Williamson


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->