#IPL2023 : தோனியை பிடிக்காதவர்கள் பிசாசுகள் - குஜராத் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. 

இந்த நிலையில் தோனி குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா பேசும் வீடியோ ஒன்றை குஜராத் டைட்டன்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. எம் எஸ் தோனி மிகவும் சீரியஸான நபர் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் அவரிடம் ஜாலியாக கிண்டலடித்து விளையாடுவேன். 

மேலும் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அது அனைத்தும் நேர்மறையானவை. அவருடன் நிறைய பேசியதை விட அவரைப் பார்த்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர், சகோதரர் நான் எப்போதும் தோனி ரசிகராக இருக்க விரும்புகிறேன். அவரை வெறுப்பவர்கள் சாத்தான்களாக மட்டுமே இருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GT captain hardik Pandya speech about MS Dhoni


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->