திடீர் ட்விஸ்ட்.. காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை - நெல்லை‌ போலீஸ் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் காணாமல் போய் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மரண வாக்குமூலம் என்ற தலைப்பில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகள் மீது ஜெயக்குமார் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு ஒரு சிலர் விளக்கம் அளித்து இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக காவல்துறை ஒரு விளக்கம் அளித்துள்ளது.

காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் மரணமடைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் ஏப்ரல் 30ம் தேதி மரண வாக்குமூலம் என்ற பெயரில் உள்ள புகார் மனு‌ மாவட்ட எஸ்.பி.யிடம் அளிக்கப்படவில்லை.

கடந்த மே2ம் தேதி ஜெயக்குமாரின் மகன் ஜெஃப்ரின் தனது தந்தையை காணவில்லை என உவரி காவல்நிலையத்தில் புகாரளித்தார். அப்போது புகாரளிக்க வந்தவர் தான் தனது தந்தையின் அறையில் இருந்ததாக அந்த கடிதத்தை காவல்துறையினரிடம் அளித்தார்.

அந்த கடிதத்தில் தான் 30.4.2024 என தேதி போடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை அதற்கு முன் யாரிடமும் ஜெயக்குமார் அளிக்கவில்லை. தனிப்படை அமைத்து காவல்துறை விசாரித்தபோது தான் மே 4 அன்று காலை எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

தற்போது வழக்கு சம்பந்தமாக 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கொலை சம்பவத்தில் காவல்துறையினரின் விளக்கம் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police explain Congress executive jayakumar not complaint


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->