நேற்றைய ஐபிஎல் போட்டி வரை களத்தில் நின்றவர், திடீர் மாரடைப்பால் மரணம்! கண்ணீர் கடலில் தத்தளிக்கும் கிரிக்கெட் உலகம்!   - Seithipunal
Seithipunal


மும்பை : ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றியவர் டீன் ஜோன்ஸ். நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான போட்டியின் போதும் வர்ணனையாளராக பணியாற்றினார். 

அவர் மும்பையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பணியாளர்களுடன் தங்கியிருந்து பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில், இன்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக திடீரென இறந்துள்ளார். 59 வயதான ஜோன்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 1984ம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார். அவர் 52 டெஸ்ட் போட்டிகளிலும் 164 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 

சர்வதேச போட்டிகளில் ஆடியது இல்லாமல் அதனை அடுத்து அவர் தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவர் சிறந்த வர்ணனையாளர் என்பதையும் தாண்டி பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் பயிற்சியாளராகவும் பணியாற்றியிருந்தார். அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய அணிகளுக்காக பயிற்சியாளராகவும் பணி செய்துள்ளார். அவருடைய மறைவு செய்தியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

மேலும் அவரது உடலை அவரது சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்கான பணியினை, தூதரக அதிகாரிகளுடன்  இணைந்து செய்து கொண்டிருப்பதாகவும் அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் திடீர் மரணம் அடைந்திருப்பது கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

former Australian cricketer dean jones passes away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->