இந்தியா - ஸ்ரீலங்கா முதல் டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்ற இந்திய அணி.. முக்கிய வீரருக்கு வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி முதலில் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்குகிறது. 

ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றதற்கு பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியாகும். தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக  ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பதவியில் இந்த டெஸ்ட் போட்டி எப்படி சிறப்பு வாய்ந்ததோ அதே போல விராட் கோலிக்கும் முக்கியத்துவம் பெற்றது. ஏனென்றால் விராட் கோலிக்கும் 100வது டெஸ்ட் போட்டியாகும். 

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

இந்திய அணியின் பட்டியல் : 

ரோஹித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஜெயந்த் யாதவ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First Test India have won the toss


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->