இறுதிப் போட்டிக்கு முன்னேற்றபோவது யார்? அர்ஜென்டினா-குரோஷியா அணிகள் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி இன்று அரைஇறுதியில் குரோஷியா அணியுடன் மோதுகிறது.

2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். 

அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

அதன்படி, நெதர்லாந்து, செனகல், அர்ஜென்டினா, போலந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், மொராக்கோ, குரோஷியா, பிரேசில், சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், தென் கொரியா ஆகிய 16 அணிகள் 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட் சுற்று போட்டியில் இருந்து காலிறுதி போட்டிக்கு நெதர்லாந்து, குரோஷியா, பிரேசில், அர்ஜெண்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ ஆகிய 8 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி போட்டிகள் முடிவில், அர்ஜென்டினா, குரோஷியா, பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதில், இன்று இரவு 12:30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும், லூக்கா மோட்ரிச்சின் குரோஷியா அணியும் மோதுகிறது.

அதனைத் தொடர்ந்து நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் மொரோக்கோ - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FIFA World Cup Argentina vs Croatia semifinal match today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->