சாதித்து காட்டிய மெஸ்ஸி.. 3வது முறையாக உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜென்டினா.. - Seithipunal
Seithipunal


2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். 

அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

அதன்படி, நெதர்லாந்து, செனகல், அர்ஜென்டினா, போலந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், மொராக்கோ, குரோஷியா, பிரேசில், சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், தென் கொரியா ஆகிய 16 அணிகள் 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட் சுற்று போட்டியின் முடிவில், காலிறுதி போட்டிக்கு நெதர்லாந்து, குரோஷியா, பிரேசில், அர்ஜெண்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ ஆகிய 8 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி போட்டிகள் முடிவில், அர்ஜென்டினா, குரோஷியா, பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டிகளின் முடிவில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 18ம்) இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதின. இதில், நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியும், உலகின் தலைசிறந்த அணியான அர்ஜென்டினா அணியும் இறுதிப் போட்டியில் மோதுவதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த இறுதி போட்டியை காண ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 90 நிமிடங்களில் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. அது தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது அதிலும் கோல் அடிக்கப்படாததால் 3-3 என்ற கோல் கணக்கில் இருந்தது.

இதனையடுத்து பெனால்டி ஹுட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது இதில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கணக்கில் மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FIFA World Cup 2022 Argentina champion


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->