ஐபிஎல் போட்டியில் அசத்திய வீரருக்கு உலகக்கோப்பை அணியில் இடம்! அடித்தது அதிஷ்டம்!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஒவ்வொரு நாட்டு அணியும் தங்களது அணியினை அறிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியினை அப்படியே உறுதி செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியில் நேற்று மாற்றம் கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணி இன்று மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜோ டென்லிக்குப் பதில் லியாம் டாவ்சன், டேவிட் வில்லேவுக்கு பதில் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இடம்பிடித்து உள்ளார்கள். 

இங்கிலாந்து அணி தரப்பில் ஏற்கனவே அலெக்ஸ் ஹேல்ஸ் ஒழுங்கீனம் மற்றும் வழக்கு காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மே 30ம் தேதி முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.  

ராயல் லண்டன் ஒருநாள் கோப்பைப் போட்டிகளில், ஹாம்ப்ஷயர் அணிக்காக ஆடிய லியாம் டாவ்ஸன் சிறப்பாக ஆடியுள்ளார், 18 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பேட்டிங்கிலும் 274 ரன்களை 45.66 என்ற சராசரியில் குவித்து ஒரு சதத்தையும் அடித்துள்ளார். 

டேவிட் வில்லேக்கு பதிலாக இடம்பெற்ற ஜோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடினார் எனபது குறிப்பிடத்தக்கது. அணியில் இடத்தினை பறிகொடுத்த டேவிட் வில்லே தன் இடம் பறிபோகும் என்றால் அது ஜோப்ரா ஆர்ச்சர் ஒருவரால் தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணி விவரம்: இயான் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், 
ஜானி பேர்ஸ்டோ, ஜேம்ஸ் வின்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, ஆதில் ரஷீத், லியாம் டாவஸன், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளன்கெட், ஜோப்ரா ஆர்ச்சர், டாம் கரன், மார்க் உட்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

england world cup squad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->