130 ஆண்டுகால சாதனை! சமன் செய்த இங்கிலாந்து அணி! டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மரண அடி! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் ஆட்டம் மான்ஸ்டர் நகரில் நடந்து வருகிறது.

இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 592 ரன்கள் குவித்தது. மேலும், அந்த அணியின் முதல் ஏழு பேட்ஸ்மேன்களில், ஆறு பேர் 50 ரன்கள் கடந்து ஒரு சாதனையை சமன் செய்துள்ளனர்.

கடந்த 1893 ஆம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் முதல் ஏழு பேரில் ஆறு பேர் 50 ரன்கள் அடித்திருந்தனர். தற்போது 130 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி தனது சாதனையை சமம் செய்துள்ளது.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 ரன்னுக்கு மேல் எடுத்து, 5 க்கும் மேல் ரன் ரைட் வைத்திருப்பது நான்காவது முறையாகும்.

தற்போது நடக்கும் இந்த டெஸ்டில் 107.4 ஓவர்களில் 592 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 5.49 ரன்ரேட் எடுத்துள்ளது. 

முன்னதாக, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 107 ஓவர்களில் 657 ரங்களை குவித்து 6.50 ரன் ரேட் விகிதத்தை வைத்திருந்தது 

மேலும் லார்ட்ஜ் மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக  82.4 ஓவர்களில் 524 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி டிக்ளர் செய்தது. அப்போது ரன்ரேட் 6.33 பதிவாகியது.

கடந்த 2001 ஆம் ஆண்டு கொழும்பில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கை அணி 103.3 ஓவர்களில் 555 ரன்கள் குவித்து 5.36 ரன்ரேட் வைத்திருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ENG vs AUS test England Team 130 years Reacord


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->