தோனி ஓய்வு பெற்றால் இவர்களுக்கு கொண்டாட்டம்.. அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் செவ்வாய் கிழமை மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் தொடங்கி மழை காரணமாக புதன் கிழமை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுமாரான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி போராடி இறுதியில் தோல்வியைத் தழுவியது.   நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதைத்தொடர்ந்து, தோனி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் தோனி நீங்கள் ஓய்வு பெறாமல் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்டில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தோனியை பாஜக சார்பில் களமிறக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் கௌதம் கம்பீர் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆனார். ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு முன்பே தோனியை பாஜகவில் இணைய வைப்பதற்கான தீவிரமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தோனி இந்திய அணியின் இருந்து ஓய்வு பெறுவது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும் பாஜகவுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni retired happy for BJP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->