தோனிக்கு கோலி எழுதிய வாழ்த்து.. ட்விட்டர் தளம் அதிரடியால்., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த வருடத்திற்கான ட்விட்டர் தளவிளையாட்டு துறையில் அதிக லைக்குகள் மற்றும் ரீட்விட் செய்யப்பட்ட ட்விட்டர் பதிவுக்கு தோனியின் பிறந்தநாள் அன்று கோலி கூறிய வாழ்த்து குறித்த பதிவானது முதலிடம் பெற்றுள்ளது. 

இந்திய ட்விட்டரில் #ThisHappened2019 என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஹேஷ் டேக்கில் இதற்கான சாதனை பட்டியலானது தற்போது ட்விட்டர் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஹேஷ் டேக்கில் அரசியல்., பொழுதுபோக்கு., சினிமா மற்றும் விளையாட்டு போன்ற பல துறைகள் சார்ந்தவை இடம்பெற்றுள்ளது. 

இதன் அடிப்படையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் லைக்., ரீட்விட்., ட்விட் மற்றும் கமன்ட்., ரசிகர்களுடனான உரையாடல் போன்றவை சாதனைகளாக இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் விளையாட்டு துறையில் அதிக லைக்குகளை ரீட்விட்களை பெற்றுள்ள இந்திய ட்விட்டர் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் பதிவானது அதிக லைக் மற்றும் ரீட்விட் பெற்று மக்களின் மனதையும் அதிகளவு கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதிவானது சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான நபர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது என்றும்., சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரீட்விட் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni birthday wish by virat kohli is first place in india


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal