#BigBreaking : அமெரிக்க வீரரிடம் இந்திய வீரர் அதிர்ச்சி தோல்வி.! ஆனால்.,  - Seithipunal
Seithipunal


இன்று காலை நடைபெற்ற மல்யுத்தம் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில், சீனாவின் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், சற்றுமுன் நடந்த அரையிறுதி போட்டியில் அமெரிக்க வீரரிடம் 10 -0 என்ற கணக்கில் தீபக் புனியா அதிர்ச்சி தோல்வியை தழுவினார். 

இருப்பினும், வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் தீபக் புனியா விளையாட இருக்கிறார். இதில் நிச்சயம் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நாம் நம்பிக்கை கொள்வோம்.

முன்னதாக ஒலிம்பிக் போட்டியில் இந்தியா:

* பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

* மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

* இன்று நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் இந்தியாவுக்கு லவ்லீனா வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

* மல்யுத்த அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் நாட்டு வீரரை எதிர்கொண்ட இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. 

* தற்போது (இன்று மாலை 3.35) பெண்கள் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆடி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepak punia loss in semi final


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->