#T20Worldcup : பும்ராவை தொடர்ந்து மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் விலகல்.. மாற்று வீரர் யார்.? - Seithipunal
Seithipunal


ரோஹித் சர்மா தலைமையிலான 14 பேர் கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இதில், ரோஹித் சர்மா தலைமையிலான 14 பேர் கொண்ட இந்திய அணி  ஆஸ்திரேலியா சென்று தீவிர வலைப்பயிற்சி மற்றும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில் பும்ராவை தொடர்ந்து மற்றொரு சிறந்த பந்துவீச்சாளரான தீபக் சஹர் உலகக்கோப்பையில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், காத்திருப்பு பட்டியல் வீரர்களான முகம்மது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வரும் அக்டோபர் 13ம் தேதி ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர். மேலும், பும்ராவுக்கு பதிலாக முகம்மது சிராஜ் அல்லது முகம்மது ஷமி தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், ஹர்ஸல் படேல், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.

காத்திருப்பு பட்டியல் வீரர்கள் : முகம்மது ஷமி, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், ஸ்ரேயாஸ் ஐயர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deepak Chahar ruled out of T20 world cup


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->