இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்.. தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கணிப்பு.! - Seithipunal
Seithipunal


50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்ல ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இதில் தொடக்கப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில், இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் அக்டோபர் 8ம் தேதி சென்னையில் விளையாடுகிறது.

இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித ஐசிசி கோப்பைகளையும் வெற்றி பெறாத நிலையில், சொந்த மண்ணில் இந்த முறை உலக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இந்த நிலையில் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புள்ள 4 அணிகளை முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் கணித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணி நிச்சயமாக அரையிறுதிக்கு முன்னேறும். அதேபோல் இந்த முறை இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நான்காவது அணியாக தென்னாபிரிக்க அணி முன்னேற வாய்ப்புள்ளது. அதேபோல் பாகிஸ்தானுக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் நான் தென்னாப்பிரிக்கா அணி முன்னேறும் என நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

De Villiers picked World Cup semifinalists


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->