தல தோனியை மதுரை சித்திரை திருவிழாவுக்கு அழைத்த ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்.! 
                                    
                                    
                                   CSK fan invite Ms dhoni madurai chithirai festival 
 
                                 
                               
                                
                                      
                                            16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.
 அதனைத் தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், அமைச்சர் அன்பில் மகேஷ், பொன்முடி, நடிகர் அஜித்தின் குடும்பத்தினர் மற்றும் சில திரை பிரபலங்களும் நேரில் பார்வையிட்டனர்.
ஆனால் இந்த போட்டியில் தோனி கடைசி வரை பேட்டிங் செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த போட்டியில் ரசிகர்கள் தல தோனி குறித்து பலவிதமான பதாகைகளை பிடித்தனர். அதில் ஒரு ரசிகர் 'ஹாய் தோனி மதுரை சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்' என்ற பதவியை பிடித்துள்ளார். தற்போதைய இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       CSK fan invite Ms dhoni madurai chithirai festival