முக்கிய வீரர்களை தட்டி தூக்கிய சென்னை அணி.. வீரர்களின் பட்டியல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2021 சீசனுக்கான மினி ஏலம் ஆனது நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்திற்காக 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அதில் 292 வீரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு அவர்களில் 61 இடங்களுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. 

இந்த ஏலத்தில் பிரமிக்க வைக்கும் வகையில் பல வீரர்கள் 10 கோடிக்கும் மேலாக சென்றது ஆச்சரியமளித்தது. அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணியால் வாங்கப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக கையில் ஜமிசன், ஜெய் ரிச்சர்ட்சன், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் 14 கோடிகளை தாண்டி ஏலம் சென்றார்கள். 

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியை ரூ. 7 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. 

கிருஷ்ணப்பா கௌதம் ரூ. 9.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

இந்திய வீரர் புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

கே பகத் வர்மா - ரூ. 20 லட்சம் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

எம் ஹரிசங்கர் ரெட்டி - ரூ. 20 லட்சம் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai team ipl auction


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal