ஆசிய கோப்பை & உலகக் கோப்பை தொடர்களை பார்க்க இலவசம் - ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக பார்க்கலாம் ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.  இந்த உலகக்கோப்பை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்  அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 48 லீக் போட்டிகளும், 3 நாக்அவுட் போட்டிகள் உட்பட மொத்தம் 51 போட்டிகள் நடைபெற உள்ளது. 

இதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் 16வது ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்ததால், தற்போது வரை எங்கு நடக்கும் என்பது முடிவு செய்யப்படவில்லை. 

ஆசியக் கோப்பை இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், ஹாங்காங், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக பார்க்கலாம் ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup and ICC World Cup streaming on Disney plus hotstar


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->