ஐபிஎல்-இலிருந்தும் ஓய்வு அறிவித்த அஸ்வின் – கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முடிவு! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளங்கி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணம் குறித்து சில தினங்களுக்கு முன்பு விளக்கம் அளித்திருந்தார்.

அவர் தெரிவித்ததாவது:“வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியானால், இனி தொடர வேண்டிய அவசியம் இல்லை என்பதால் தான் ஓய்வு முடிவை எடுத்தேன்,”
என்று கூறினார்.

ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு, அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்த முடியாததால், பல போட்டிகளில் அவரை ஓரங்கட்டினர்.
2009-க்கு பிறகு, முதல் முறையாக அவர் 10-க்கும் குறைவான போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற நிலை ஏற்பட்டது.

இதனால், வரவிருக்கும் 19ஆவது ஐபிஎல் சீசனுக்கு முன்பே, சிஎஸ்கே அஸ்வினை நீக்கிவிடும் என்ற தகவல்கள் பரவின. அதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் டிவோல்ட் பிரேவிஸை (Dewald Brevis) வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக அஸ்வின் பேசியதாக செய்தி பரவியது.

பின்னர் அதற்கு விளக்கம் அளித்த அவர்,“நான் அப்படி எதுவும் பேசவில்லை”
என்று கூறினார்.இந்நிலையில், இன்று அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த முடிவு, ஏற்கனவே அவரின் சர்வதேச ஓய்வு காரணமாக மனம் உடைந்திருந்த ரசிகர்களுக்கு இரட்டிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில், “அஸ்வின் போன்ற அனுபவம் மிக்க வீரரை இப்படி எளிதில் இழக்கக் கூடாது” என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ashwin announces retirement from IPL


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->